சாலையை சீரமைக்கக் கோரி கட்டு போட்டுக்கொண்டு போராட்டம்

சாலையை சீரமைக்கக் கோரி கட்டு போட்டுக்கொண்டு போராட்டம்

1 mins read
9a99ec93-688f-469a-bc50-a6d29760b537
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். - படம்: ஊடகம்

சாலையை சீரமைக்கக் கோரி கட்டு போட்டுக்கொண்டு போராட்டம் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்கக் கோரி சென்னை அருகே உள்ள குரோம்பேட்டை பகுதியில் பொது மக்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் பங்கேற்றவர்கள் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டதுபோல் உடலில் ஆங்காங்கே கட்டுகளைப் போட்டிருந்தனர்.

மோசமான சாலையால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
போராட்டம்