சென்னை: அடுக்குமாடிக் குடியிருப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் அதிர்வு காரணமாக பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர்.
சென்னை அருகே உள்ள கொரட்டூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பபில் சனிக்கிழமை இரவு 1.30 மணியளவில் திடீர் அதிர்வு ஏற்பட்டது. அக்குடியிருப்பில் மொத்தம் இருநூறு வீடுகள் உள்ளன.
அங்கு வசிப்போர் அவசர அவசரமாக குழந்தைகள், முதியோர்களை அழைத்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் திரண்டனர்.
இதுகுறித்து காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளும் வீரர்களும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை ஆய்வு செய்ததுடன் நில நடுக்கம் ஏற்படவில்லை என்றும் உறுதி செய்தனர்.
பிறகு ஏன் அதிர்வு ஏற்பட்டது என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதுகுறித்து ஆய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


