சென்னை: சென்னைக்கு அடுத்துள்ள முட்டுக்காடு கடல் பகுதியில் ஜூலை 26ஆம் தேதி மாலை நான்கு பறக்கும் தட்டுகள் வானில் தென்பட்டுள்ளன.
இந்த பறக்கும் தட்டுகள் வெளிச்சமாக காட்சியளித்தாகக் கூறப்படுகிறது.
ஓய்வுபெற்ற சிபிசிஐடி காவல்துறை டிஜிபி. பிரதீப் பிலிப் தனது கைப்பேசியில் பறக்கும் தட்டுகளைப் படம் பிடித்துள்ளார்.
அவர் தனது மனைவியுடன் முட்டுக்காடு கடற்கரையில் மாலை 5.30 மணி அளவில் இருந்தபோது பிரதீப் பிலிப்பின் கண்ணில் நான்கு ஒளி வீசும் தட்டுகள் காணப்பட்டன.
உடனடியாக தனது கைப்பேசி மூலம் அவர் படம் பிடித்துள்ளார்.
பின்னர் புகைப்படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தபோது பறக்கும் தட்டு போன்று நான்கு உருவம் தெரிந்துள்ளது.
இதை பார்த்து வியப்படைந்த அவர், புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.