குழந்தையைக் காப்பாற்ற ரூ.17 கோடி தேவை: தமிழகத் தாய் கண்ணீர் கோரிக்கை

குழந்தையைக் காப்பாற்ற ரூ.17 கோடி தேவை: தமிழகத் தாய் கண்ணீர் கோரிக்கை

1 mins read
5d0b9b92-a721-4696-a0f6-4c4492cbe52c
படம்: - தமிழ் முரசு

திருப்பத்தூர்: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தையைக் காப்பாற்ற ரூ.17 கோடி விலையுள்ள மருந்து தேவைப்படுவதாகவும் அரசு உதவ வேண்டும் என்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதுப் பெண்மணி ரம்யா ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இவரது கணவர் ஆறு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமாகிவிட்டார்.

இந்நிலையில் ரம்யா அளித்துள்ள மனுவில், தனது முதல் குழந்தை பிறந்து ஏழு மாதங்களிலேயே உடல்நல பாதிப்பால் உயிரிழந்துவிட்டது என்றும் இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தை அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கணவரும் முதல் குழந்தையும் இறந்துபோன அதிர்ச்சியில் இருந்து மீளவே பல மாதங்களாகின. இந்நிலையில், எனது இரண்டாவது குழந்தைக்கு அரிய வகை நோய் பாதிப்பு உள்ளது என்றும் குழந்தையைக் காப்பாற்ற அமெரிக்காவில் இருந்து ரூ.17 கோடி மதிப்புள்ள ஊசியை வரவழைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

“என் குழந்தையைக் காப்பாற்ற தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்,” என்று ரம்யா கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஒரு குழந்தையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நோய் தாக்கிய நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பில் செலுத்தப்பட்ட ஒரு ஊசியால் அக்குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது என்றும் ரம்யா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்