மகாராஷ்டிரா கிரேன் விபத்தில் உயிரிழந்த தமிழர் குடும்பங்களுக்கு ரூ. 3 லட்சம்

மகாராஷ்டிரா கிரேன் விபத்தில் உயிரிழந்த தமிழர் குடும்பங்களுக்கு ரூ. 3 லட்சம்

1 mins read
168c7313-09b5-4f5c-b12e-1a4b56aaf96d
கிரேன் விபத்தில் இரு தமிழர்கள் உயிரிழந்தனர். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: மகாராஷ்டிராவில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டும் பணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். அவர்களில் இருவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ், 36, மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கண்ணன், 23.

“இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செஞ்சி கேஎஸ் மஸ்தான் மேற்கொண்டார்.

“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
விபத்து