சென்னை: தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு பூ சந்தைக்கு வரத்து குறைந்ததால் பூ விலை ஏறியது.
கனகாம்பரம் கிலோ ரூ.600 க்கு விற்கப்பட்டது. சாமந்திப்பூவின் வரத்தும் குறைந்ததால் அதன் விலையும் அதிகரித்து ரூ.180 வரை விற்பனை ஆகிறது. விற்பனை மந்தமாக நடக்கிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
முல்லைப் பூ கிலோ ரூ.300க்கு விலை போனது. மல்லிப்பூ ரூ.400க்கு விற்கப்பட்டது. பன்னீர் ரோஸ் ரூ.50 முதல் ரூ.60 வரையும் அரளிப்பூ ரூ.200க்கும் சம்பங்கி கிலோ ரூ.120க்கும் சென்டுமல்லி பூ விலை ரூ.60க்கும் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.