தூத்துக்குடியில் பனிமய மாதா தங்கத் தேரோட்டம்

தூத்துக்குடியில் பனிமய மாதா தங்கத் தேரோட்டம்

1 mins read
c37b2c00-847a-4555-ad13-4c2b02499443
தூய பனிமய மாதா பேராலயம் - படம்: ஊடகம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்துவரும் பனிமயமாதா பேராலயத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தங்கத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தங்கத் தேரோட்டத்தை காண ஏராளமானோர் தூத்துக்குடியில் திரண்டுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா எனப்படும் பனிமய மாதா பேராலயத்தின் 441வது ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில், அந்த ஆண்டுகளில் தங்கத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இது 16வது முறை நடைபெறும் தங்கத்தேரோட்டமாகும்.

குறிப்புச் சொற்கள்