கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

1 mins read
b8d43026-63f6-47b9-824d-f2d220788afa
வாரவிடுமுறை நாள்களில் கொடைக்கானலில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். - படம்: ஊடகம்

திண்டுக்கல்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக குளு குளு சுற்றுலாத்தலங்களை தேடிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வார விடுமுறை நாள்களில் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள மேயர் சதுக்கம், பைன் மரச்சோலைப் பகுதி, குணா குகை, தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, படகுக்குழாம் போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் காணமுடிகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அங்குள்ள கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்