சென்னை: அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, ரூ.22 லட்சம் ரொக்கப் பணமும் ரூ.16.6 லட்சம் மதிப்பிலான பொருள்களும் 60 நில சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு தொடர்பாக கரூர், திண்டுக்கல், கோவை, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் கடந்த 3ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

