திருச்சி: தமிழ்நாட்டின் திருச்சி பகுதியைச் சேர்ந்த டி. சப்பாணி என்ற கொலைகாரர் 2009 முதல் 2016 வரை மொத்தம் எட்டுப் பேரைத் தீர்த்துக்கட்டி இருக்கிறார் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கிருஷ்ணசமுத்திரம் என்ற பகுதியைச் சேர்ந்த சப்பாணி தன்னுடைய தந்தையையே கொன்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
சப்பாணிக்கு எதிராக வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், எம் தங்கதுரை, சத்தியநாதன் என்ற இருவரையும் சப்பாணி கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கு விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் திங்கட்கிழமை நடந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே பாபு என்பவர், சப்பாணியை அவர் சாகும் வரை சிறையில் தள்ளுங்கள் என்று உத்தரவிட்டார்.
சப்பாணிக்கு எதிரான மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வரவிருக்கின்றன.
சப்பாணி 2016ஆம் ஆண்டு தங்கதுரை, 35, கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து திருச்சி திருவெறும்பூர் பகுதியில் இருந்து தெக்கன், 58, விஜய் விக்டர், 27, கோகிலா, 72, குமரேசன், 41, சத்தியநாதன், 50, ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
பிறகு நடந்த விசாரணையில் சப்பாணி மொத்தம் எட்டுப் பேரைக் கொலை செய்து இருக்கிறார் என்பது தெரியவந்தது.

