கொலை வழக்கில் பிச்சைக்காரருக்கு வாழ்நாள் சிறை

1 mins read
1cde6672-43fe-45cc-bfb8-16ac3eaa08c9
தெருவில் தூங்கியவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கொலை வழக்கில் பிச்சைக்காரர் ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்தவர் கந்தசாமி, 61. திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தைச் சாப்பிட்டும் யாசகம் பெற்றும் வாழ்க்கை நடத்தி வந்தார்.

இரவு நேரம் தெருக்களில் படுத்துத் தூங்குவதை வழக்கமாகக்கொண்டிருந்த அவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த பிச்சைக்காரரான முருகேசனுக்கும் தெருவில் தூங்குவதற்கு இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.

ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தகராற்றைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 17ஆம் தேதி கந்தசாமி படுகொலை செய்யப்பட்டார்.

இரவில் ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம் அருகே தெருவோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமியின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்ததாக ஸ்ரீரங்கம் காவல்துறை முருகேசனைக் கைது செய்தது.

திருச்சி முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. கொலை வழக்கில் முருகேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்