நெல்லை: சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளைப் பார்த்து பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்த சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை நெல்லை காவல்துறை கைது செய்தது.
முன்னதாக வெடிகுண்டு தயாரித்த பின்னர் அவற்றை சுவரில் வீசி எறிந்து ஒத்திகை பார்த்த மூவரும், அதை அப்படியே படம்பிடித்து இன்ஸ்டகிராமில் பதிவேற்றினர்.
இந்தக் காணொளியின் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்க, மூன்று பேரும் கையில் அரிவாளை ஏந்தியபடி நடனமாடுகின்றனர்.
சமூக ஊடகங்களில் இந்தக் காணொளி பரவலாகப் பகிரப்பட்டது. தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி சிறுவன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்துள்ளனர்.