சென்னை: காசிமேட்டுப் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் 10 பேர் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் சிக்கிய மீனை இழுக்க முடியாமல் மூன்று பேர் மிகவும் சிரமம் அடைந்தனர்.
பிறகு பலர் சேர்ந்து வலையை இழுத்தபோது அதில் ராட்சத சுறாமீன் சிக்கி இருந்தது தெரிந்தது.
காசிமேட்டுக் கரைக்கு திரும்பிய மீனவர்கள் வலையில் சிக்கிய சுறாவை எடை போட்டுப் பார்த்தபோது அது ஏறத்தாழ 350 கிலோ இருந்தது. இந்த மீன் ரூ.75,000 வரை விலைபோகும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

