இந்தியாவின் 77வது சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை நாடெங்கும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானையும் நாட்டுப் பற்றுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளது.
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. மேலும் இங்குள்ள கோயில் யானை மங்களத்திற்கு நெற்றியில் தேசியக் கொடி வரையப்பட்டிருந்தது.
மேலும் யானை மங்களம், ஆதி கும்பேஸ்வரரை வழிபட்டு பிரகாரத்தில் தேசியக் கொடியுடன் வலம் வந்து சுதந்திர தினத்தைக் கொண்டாடியது.

