வீட்டிலேயே பாலியல் தொழில் செய்த தம்பதியர் கைது

வீட்டிலேயே பாலியல் தொழில் செய்த தம்பதியர் கைது

1 mins read
1461db01-a800-49a5-aeb3-76f1f0c5fb69
படம்: - தமிழ் முரசு

சென்னை: வீட்டிலேயே பாலியல் தொழில் நடத்தி வந்த தம்பதியரை சென்னை காவல்துறை கைது செய்தது.

வடசென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் வசித்து வரும் மணிமாறன் (வயது 45), மனைவி சித்ரா (37 வயது) தம்பதியர் தங்கள் வீட்டிலேயே பாலியல் தொழில் நடத்தி வருவதாக காவல்துறைக்குப் பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து மகளிர் காவல்துறையினர் இருவரையும் பிடிக்கத் திட்டமிட்டனர்.

திங்கட்கிழமை காவல்துறையினர் அதிரடியாக அத்தம்பதியரின் வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள அறைகளில் சிலர் தனிமையில் இருப்பது தெரியவந்தது. வாடிக்கையாளர்களும் மணிமாறன், சித்ரா தம்பதியரும் கைது செய்யப்பட்டனர். உல்லாசம் அனுபவிக்க இத்தம்பதியர்க்கு பணம் கொடுத்ததாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் மணிமாறன் பலருக்குத் தகவல் அனுப்பியதும் தெரியவந்தது.

இதற்கிடையே, சென்னையில் இதேபோன்று மற்ற குடியிருப்புப் பகுதிகளில் யாரேனும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனரா என காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

இக்குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்