சுதந்திர நாளையொட்டி செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டில் அனைத்துக் கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராகவும் நீட் தேர்வுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘
ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் திறனைப் பாதிக்கக்கூடிய வகையில் அமையப்பெற்ற நீட் தேர்வுக்கு எதிரான தமிழ் நாடு அரசின் அனைத்து நிலைப்பாடுகளையும் ஆளுநர் ரவி புறக்கணிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது,’ என்று கூறி ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.