பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்: ராமதாஸ்

பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்: ராமதாஸ்

1 mins read
7f303f1e-375e-44f0-8219-68c205cce962
-

சென்னை: தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தேங்காய்க்கு உரிய விலை கிடைப்பதில்லை. அதனால் தென்னை விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில், நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

“மத்திய அரசுடன் தமிழக அரசும் இணைந்து, தமிழகத்திலுள்ள அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” என ராமதாஸ் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்