மதுராந்தகம் அருகே கார் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே கார் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு

1 mins read
3f5cf761-5791-4513-b094-b725667e9488
-

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள கால்வாயில் கவிழ்ந்தது.

அந்த விபத்தில், காரில் சென்ற மூன்று பேர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். இதேபோல் ஊரப்பாக்கத்தில் நடந்த இன்னொரு விபத்தில், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் ஒன்றின்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மதுராந்தகம் பகுதி விபத்தில், நிலக்கோட்டையைச் சேர்ந்த கதிரவன்(30), மன்னார்குடியைச் சேர்ந்த நந்தகுமார்(55), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்(35) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆத்தூர் சுங்கச்சாவடி முதல் பெருங்களத்தூர் வரை உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 16 நாள்களில் வாகன விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
விபத்து