சென்னை: கோயம்பேடு சந்தையை வேறு பகுதிக்கு மாற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை எனப் பெயர் பெற்ற கோயம்பேடு சந்தை லாப நோக்கத்துக்காக இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“கோயம்பேடு சந்தையை வேறு பகுதிக்கு மாற்றிவிட்டு அந்த இடத்தில் வணிக வளாகம், நட்சத்திர விடுதி, விளையாட்டு திடல் ஆகியவற்றை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு உள்ளது.
“கோயம்பேடு சந்தை இடமாற்றம் செய்யப்பட்டால், அதை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்,” என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

