சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான மோதலின்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
சென்னை வேளச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் குருநானக் கல்லூரியில் இருதரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
அப்போது, மாணவர்கள் ஒருவர்மீது ஒருவர் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. அத்துடன், அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தொடர்பில் மாணவர்கள் மூவரைப் பிடித்து காவல்துறை விசாரித்து வருகிறது. மேலும், குருநானக் கல்லூரியில் காவல்துறைப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.


