ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

1 mins read
c8632b6f-31f3-428f-8abc-1e0a71711bf1
சென்னை மத்திய ரயில் நிலையம். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத் தலைநகர் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

தொலைபேசி வழியாக வந்த அந்த மர்ம அழைப்பை அடுத்து, வெடிகுண்டு வல்லுநர்கள் மத்திய ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். சோதனை நடவடிக்கையில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன.

இதனிடையே, மிரட்டல் விடுத்தவரைக் கண்டறியும் பணியும் முடுக்கிவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மணிகண்டன் என்பவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பதனைக் காவல்துறைக் கண்டறிந்து, அவரைக் கைதுசெய்தது.

விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் இதற்கு முன்னரும் அவர் இப்படிப் பலமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துக் கைதானவர் என்பதும் தெரியவந்தது.

சில நாள்களுக்குமுன் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அதில் உண்மையில்லை எனக் கண்டறியப்பட்டது. அதன் தொடர்பில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்