4 ஆண்டுக்குப் பிறகு தொகுதிக்குச் சென்ற திருநாவுக்கரசருக்கு எதிர்ப்பு

4 ஆண்டுக்குப் பிறகு தொகுதிக்குச் சென்ற திருநாவுக்கரசருக்கு எதிர்ப்பு

1 mins read
850e8648-fe31-4e9d-8424-208bdac09fde
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் திருநாவுக்கரசருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: நான்கு ஆண்டுக்குப் பிறகு தொகுதிப் பக்கம் தலைகாட்டிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செவ்வாய்க்கிழமை மக்கள் குறைகேட்க வந்தார்.

அப்போது, அப்பகுதி எஸ்டிபிஐ கட்சியினர் கிளைத் தலைவர் அப்துல் ரகுமான் தலைமையில் முற்றுகையிட்டனர்.

‘‘நான்கு ஆண்டுக்குப் பிறகு இப்பத்தான் இங்கு வர்றீங்க. நன்றி சொல்லக்கூட வரல. அடுத்த தேர்தலை எதிர்பார்த்து வர்றீங்களா?,” என்று திருநாவுக்கரசரைப் பார்த்து ஆத்திரத்துடன் கேட்டனர்.

அவரது பதிலில் திருப்தியடையாத கட்சியினர் திருநாவுக்கரசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

குறிப்புச் சொற்கள்