வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தமிழர் குடும்பங்களுக்கு உதவி

வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தமிழர் குடும்பங்களுக்கு உதவி

1 mins read
13b424e1-61e6-485f-9174-507cab1c15f6
தமிழக முதல்வர் ஸ்டாலின். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: வெளிநாடுகளில் பணியிட விபத்துகளில் உயிரிழக்கும் தமிழர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உதவித்திட்டம் அவித்துள்ளது.

அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 12,000 ரூபாயும், திருமண உதவித் தொகையாக 20,000 ரூபாயும் வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் பணியாற்றி வரும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தைக் காக்கும் பொருட்டு உதவித் தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

உதவித்தொகையின் அளவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையைப் பெற அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண உதவித் தொகை பெற மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும்.

கல்வி உதவித் தொகை பெற 11, 12-ஆம் வகுப்புகளில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் , அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ சேர்க்கை பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஒரே குடும்பத்தில் இருவருக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்