புதுக்கோட்டை: தமிழகத்தில் ஐம்பது அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவர்கள் நெகிழித் தண்ணீர் புட்டிகளைப் பயன்படுத்துவது வெகுவாகக் குறைந்துள்ளது என்றார்.
“மாணவர்களுக்கு விரைவில் உலோகத்தால் ஆன தண்ணீர் புட்டிகள் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். பசுமைப் பள்ளிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்கும்.
“தமிழகத்தில் 53 இடங்களில் குப்பைக்கிடங்குகள் ‘பயோ மைனிங்’ மூலம் அகற்றப்பட்டு உயிர் நிலங்களாக மீட்கப்பட்டுள்ளன,” என்று அமைச்சர் மெய்யநாதன் மேலும் தெரிவித்தார்.

