ராதாகிருஷ்ணன்: தமிழகத்தில் 2 கோடி பேருக்கு நீரிழிவு

1 mins read
25075998-2541-4492-84bc-f80433db6580
ராதாகிருஷ்ணன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் இரண்டு கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடற் பயிற்சி, உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் நீரிழிவு பாதிப்பைத் தவிர்க்கலாம் என்றார்.

நீரழிவு, அதன் சிக்கல்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், நீரிழிவு நோய்க்கான காரணங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான தீர்வினை மக்கள் பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

“இந்தியாவில் 10 கோடி மக்களுக்கு மேல் நீரிழிவு நோய் பிரச்சினை உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 2 கோடி பேருக்கு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

“வாழ்வியல் முறை, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் இதனை நாம் தவிர்க்க முடியும்,” என்றார் ராதாகிருஷ்ணன்.

குறிப்புச் சொற்கள்
மருத்துவம்

தொடர்புடைய செய்திகள்