தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மதுரை ரயில் தீ விபத்தில் சதித்திட்டம் எதுவும் இல்லை’

2 mins read
6e8825fd-cb26-4362-8359-42c8d952de47
தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி. - கோப்புப்படம்: ஊடகம்

மதுரை: மதுரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ பற்றியது குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் விபத்தின் பின்னணியில் சதித் திட்டம் எதுவும் இல்லை என்று தெற்கு ரயில் பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கான ரயிலில் சமையல் எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்தியபோது, தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய சமையல்காரர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காவல்துறையின் தடயவியல் குழுவினர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, விபத்துக்குள்ளான பெட்டிக்குள் எரிந்த நிலையில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட பொருள்களை மீட்டனர். மேலும், சிலிண்டர் வெடித்துச் சிதறிய பாகங்களும் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரித்துள்ளனர்.

இந்நிலையில், தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி இன்று மதுரை வந்தார். அவர் விபத்துக்குள்ளான பெட்டியைப் பார்த்து ஆய்வு செய்தார். விபத்தில் காயமடைந்து மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதன்பின், செய்தியாளர்களி டம் பேசிய அவர், “மதுரை ரயில் பெட்டி தீ விபத்து குறித்து முறையான விசாரணை நடக்கிறது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தியவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிவில் தெரியவரும்.

இவ்விபத்து தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சதித் திட்டம் எதுவுமில்லை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், விசாரணை தொடரும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
விபத்துரயில்