சத்தியநாராயண ராவ்: ரஜினி ஆதரவு எவருக்கும் இல்லை

சத்தியநாராயண ராவ்: ரஜினி ஆதரவு எவருக்கும் இல்லை

1 mins read
8cbd2053-1688-4bc7-ad22-9f4af155479c
ரஜினியுடன் சத்திநாராயண ராவ். - படம்: ஊடகம்

திருச்சி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினியின் ஆதரவு யாருக்கும் கிடைக்காது என அவரது மூத்த சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, திருச்சியில் நடைபெற்ற வெற்றி விழாவில் சத்தியநாராயண ராவ் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி அடுத் தடுத்து புதுப் படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ரஜினி திரையுலகில் தொடர்ந்து இயங்குவதால் திரையுலகத்தை நம்பியுள்ள ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் பயனடைகின்றனர் என்றும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றும் சத்தியநாராயண ராவ் கூறினார்.

“நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டார். ரசிகர்கள், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம்,” என்றார் சத்தியநாராயண ராவ்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்