நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீஸ்வரன் காலமானார். அவருக்கு வயது 55. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாயார் சரோஜினி (87) காலமான நிலையில், அடுத்த அதிர்ச்சியாக இன்று சகோதரர் ஜெகதீஸ்வரனின் மறைவு நடிகர் வடிவேலுவுக்கு பேரிடியாய் விழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே கல்லீரல் செயலிழப்பு காரணமாக மதுரை ஐராவதநல்லூரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அவரது இல்லத்தில் காலமானார்.
மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் அவரது தம்பி ஜெகதீஸ்வரன் காதல் அழிவதில்லை உள்ளிட்ட 3 படங்களில் நடித்திருக்கிறார். பின்பு சிறு சிறு பிரச்சினைகள் காரணமாக நடிக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.
வடிவேலுவிற்கு மூன்று தம்பிகளும் இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள். அத்தோடு தன் உடன் பிறந்தவர்கள் அனைவரையும் நன்கு பார்த்துக் கொண்டு அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்தவர் வடிவேலு என்று அவருடைய தம்பி ஜெகதீஸ்வரன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்களும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

