சிஏஜி அறிக்கை குறித்த முதல்வர் கருத்தை ஆமோதித்து மதுரையில் வைகோ பேட்டி

1 mins read
af60ffab-b760-46e4-acc4-936304c66dc3
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி, வலையங்குளம் பகுதியில் மதிமுக மாநாடு நடைபெறவுள்ள இடத்தை ஆய்வுசெய்ய, அப்பகுதிக்கு வருகை தந்த வைகோ. - படம்: ஊடகம்

மதுரை: மருத்துவக் காப்பீட்டில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆதாரங்கள், அடிப்படைக் காரணங்கள் இன்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் எதையும் சொல்ல மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி, வலையங்குளம் பகுதியில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி மதிமுக சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

மாநாடு நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில் மருத்துவக் காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

மருத்துவக் காப்பீட்டு ஊழல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார் என்றால் அதில் உண்மை இருப்பதால் அவ்வாறு கூறியுள்ளார்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரையில் அண்ணா பிறந்தநாள் தொடர்பான பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். அந்த இடத்தினை ஆய்வு செய்வதற்காக தான் தற்போது மதுரை வந்துள்ளதாகவும் வைகோ தெரிவித்தார். இரு தினங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஊழல்கள் குறித்து பட்டியல் வெளியிட்டிருந்தார் முதல்வர்.

குறிப்புச் சொற்கள்