சென்னை: வெளிநாடுகளில் நீண்ட நாள்களாக தங்கும் அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
அரசு அனுமதி இல்லாமல் அரசு மருத்துவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்றும் அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
“உரிய அனுமதி பெற்று வெளிநாடு சென்று நீண்ட நாள்கள் நாடு திரும்பாத மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் அரசு மருத்துவர்கள் வெளிநாடு செல்லக்கூடாது.
“மேலும், வெளிநாடுகளில் தங்கியுள்ள அரசு மருத்துவர்கள் குறித்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

