சாலையில் சென்ற சிறுமியை கடித்து குதறிய நாய்கள்

சாலையில் சென்ற சிறுமியை கடித்து குதறிய நாய்கள்

1 mins read
7276a063-0e2c-4ea7-ae00-c38a81576ce2
சாலை நடுவே சிறுமியைச் சுற்றி வளைத்துக் கடித்த நாய்கள். - படம்: இந்திய ஊடகம்

ஓசூர்:  சாலையில் நடந்து சென்ற ஐந்து வயதுச் சிறுமியை நாய்கள் சுற்றி வளைத்துக் கடித்து குதறியுள்ளது. ஓசூரில் இச்சம்பவம் நடந்துள்ளது.

வாசவி நகரைச் சேர்ந்த கார்த்திக்கின் மகள் தேஜாஸ் சாலையில் நடந்து சென்றபோது, மூன்று நாய்கள் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறின. காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். சிறுமியை நாய்கள் சுற்றி வளைத்து கடிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.

ஓசூரில் அண்மைக் காலமாக ஏராளமான தெரு நாய்கள் அதிகரித்துவிட்டதால், அவற்றை மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்