என்எல்சி நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு

கடலூர்: என்எல்சி நிறுவனத்தால் நெய்வேலியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக அதிகமான புகார்கள் வந்ததையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

கடந்த மாதம், ‘பூவுலகின் நண்பர்கள்’ என்ற அமைப்பு, ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ என்னும் தலைப்பில் என்எல்சி நிறுவனத்தை சுற்றியுள்ள சிற்றூர்களில் ஆய்வு மேற்கொண்டது. பின்னர், கடந்த மாதம் 8ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் நிர்வாகிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில், நெய்வேலியில் பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளும், நிலத்தடி நீரும், வேளாண் நிலமும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவில் ரசாயனங்கள். கன உலோகங்களால் பாதிப்படைந்திருப்பதாக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து என்எல்சி இந்தியா நிறுவனத்தைச் சுற்றி உள்ள நெய்வேலி பகுதியை ஆய்வு செய்ய மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு உத்தரவிட்டன.

இந்த நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கூடுதல் தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக புதன்கிழமை காலை பழைய நெய்வேலி, மேல்பாப்பன்பட்டு, மேல்பாதி, பெரியகுறிச்சி, குறவன்குப்பம் , கீழ்பாதி, வடக்குசேப்பளாநத்தம் உள்ளிட்ட 33 கிராமங்களில் உள்ள மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட குடிநீர் மாதிரிகள் மற்றும் பொது குடிநீர் குழாய் மூலம் பயன்படுத்தும் தண்ணீர் மாதிரிகளை சேகரித்துள்ளனர்.

அண்மைய சில மாதங்களாக நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் உள்ளி்ட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் என்எல்சி நிறுவனத்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் அதிர்சர்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

அவ்வழக்கு மீதான விசாரணையின்போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் இக்குழு ஏற்கெனவே சில இடங்களில் நீர் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வின் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதால் முடிவுகள் கிடைத்தவுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!