தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கதைக்களத்தில் எழுத்தாளர் இன்பாவின் ‘மூங்கில் மனசு’

1 mins read
d87f971c-1db2-4b7d-b9f8-76cbff783b4c
-

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி செப்டம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3.00 மணிக்கு, சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது. 

சிங்கப்பூர்ச் சூழலில் நவீன பெண்களின் உணர்வுகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இன்பாவின் மூங்கில் மனசு’ சிறுகதைத் தொகுப்பின் கலந்துரையாடல் அதில் இடம்பெறுகிறது. பட்டிமன்ற பேச்சாளர் திருவாட்டி ஸ்வர்ணலதா ஆவுடையப்பன் நூலின் சிறப்புகளைக் கதைக்கள வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நூலாசிரியருடன் கலந்துரையாடலும் இடம்பெறவிருக்கிறது.

கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன.