தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரவி கண்ணனுக்கு ‘ரமோன் மகசேசே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆசியாவின் நோபெல் பரிசு’ என்று குறிப்பிடப்படும் இந்த விருதுக்கு தாம் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருமைப்பாடு, துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தனிநபர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த விருது அளிக்கப் படும்.
மருத்துவர் ரவி கண்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர். புற்றுநோய் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். அசாம் மாநிலத்தில் புற்றுநோய் தொடர்பான சிகிச்சை அளிப்பதில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தவர் என்றும் அதன் மூலம் ஏராளமான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியவர் என்றும் மருத்துவத் துறையினர் இவரைப் பாராட்டுகின்றனர்.
முன்னதாக சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்துள்ளார் ரவி கண்ணன்.
நடப்பாண்டுக்கான ரமோன் மகசேசே விருதுகளைப் பெறு பவர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி நான்கு பேர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
ரவி கண்ணனுடன், பங்ளாதேஷை சேர்ந்த கோர்வி ரக் ஷாந்த், திமோர்-லெஸ்டீயைச் சேர்ந்த யூஜெனியோ லெமோஸ், பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த மிரியம் கரோனல்-ஃபெரர் ஆகியோர் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மகசேசே விருது பெறுபவர் களுக்கு சான்றிதழ், பதக்கம், 50 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகியவை வழங்கப்படும். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் ரவி கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


