தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

28 மாதங்களில் 925 கோவில்களில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் குடமுழுக்கு

1 mins read
2a9a3c49-7eb0-42bd-bf68-02036f006964
பழனி கோவிலில் கடந்த ஜனவரி மாதம் குடமுழுக்கு நடைபெற்றது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 28 மாதங்களில் 925 கோயில்களில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் கும்பாபிஷேகம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 28 மாதங்களில் மட்டும் 925 கோவில்களில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திருப்பணிகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் 15 முக்கியமான கோயில்களில் ரூ.1,430 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருவதாகவும் குடமுழுக்கு நடைபெறாத கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறநிலையத் துறை தெரிவித்தது.

“கடந்த 2021 மே மாதம் முதல் மொத்தம் 925 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உரிய வகையில் திட்டமிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்று அறநிலையத் துறை குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்