சென்னை: தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக தமிழ்நாடு தொழில்நுட்ப மையமும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸும் கைகோத்துள்ளன.
இருதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்மூலம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தில் அறிவுசார் பங்கு தாரராகக் கருதப்படும்.
இந்த அடிப்படையில் தமிழகத்தில் துளிர் (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ரோல்ஸ் ராய்ஸ் உதவும். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களுக்கு சிறந்த வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களையும் அந்நிறுவனம் வழங்கும் என தமிழக அரசு தெரிவித்தது.
ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.
வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் மீது கவனம் செலுத்த, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது.

