தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர் உதயநிதி வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்பு

2 mins read
c27bca46-26c3-4174-b2c8-08c7db2794f9
உதயநிதி. - படம்: ஊடகம்

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர்ப் பகுதி யான நீலாங்கரையில் வசித்து வருகிறார் அமைச்சர் உதயநிதி. அவரது வீடு நோக்கிச் செல்லும் பசுமை வழிச்சாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சனாதன தர்மம் குறித்து உதயநிதி அண்மையில் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்து சமயத்தை இழிவுபடுத்தியதாக உதயநிதி மீது டெல்லி, பீகார் உள்ளிட்ட வடமாநிலங் களில் சிலர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்து அமைப்புகள் உதயநிதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் வீட்டுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, வட மாநில சாமியார் ஒருவர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வன்முறையைத் தூண்டும் இந்த அறிவிப்பு தொடர்பாக அவர் மீது நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தனது தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவிக்கத் தேவை இல்லை என்றும் பத்து ரூபாய் என்று அறிவித்தாலே போதும் என்றும் உதயநிதி கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, மதக்கல வரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாங்களாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் பலர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இந்தக் கடிதத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், முன்னாள் தூதர்கள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 262 பேர் கையெழுத்திட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்