தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் மீது மதுரையில் வழக்குப் பதிவு

1 mins read
31446a19-06d5-4044-836a-aecc92fdf27e
அமைச்சர் உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்க்கு ரூ.10 கோடி பரிசு என அறிவித்திருந்த உத்தரப் பிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா. - கோப்புப்படம்: ஊடகம்

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்கிற சாமியார், அமைச்சர் உதயநிதி தலையைக் கொண்டு வருவோர்க்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் நேற்று முன்தினம் உதயநிதியின் தலையை யாரும் சீவவில்லை என்றால் நானே சீவுவேன். அதற்காக வாள் ஒன்றையும் தயாரித்துள்ளேன்.

உதயநிதி தலையை வெட்ட ரூ.10 கோடி போதாது எனில் அந்த தொகையை உயர்த்தவும் தயார் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், காணொளி வெளியிட்ட பரமஹம்ச ஆச்சார்யா மற்றும் அவரது காணொளியை X தளத்தில் பதிவிட்ட ஐடியின் பயனாளர் பியூஸ்ராய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவின் மதுரை மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் தேவசேனன் சார்பில் மதுரை மாவட்ட இணைய குற்றவியல் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் அடிப்படையில், இருவர் மீதும் மதுரை மாநகர இணைய குற்றவியல் காவல்துறை விசாரணை நடத்தி, கலகத்தை விளைவிக்கும் நோக்கில் செயல்படுதல், ஒற்றுமைக்கு குந்தகமாக செயல்படுதல், அமைதியின்மையை வேண்டுமென்றே ஏற்படுத்துதல், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல், தீய எண்ணத்தை உருவாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேபோல் சாமியாரின் டுவிட்டர் கணக்கை கையாளும் பியூஸ் ராய் என்பவர் மீதும் அதே 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்