விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கருங்கல், செங்கல்லைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட வட்ட வடிவிலான சுவர் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் வெம்பக்கோட்டையில் நடக்கும் இரண்டாம் கட்ட அகழாய்வில் கூம்பு வடிவ சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட அகழாய்வின்போது 3,254 பொருள்கள் கண்டறியப்பட்டன. அந்தப் பொருள்கள் அனைத்தையும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அப்பகுதியில் கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட அகழாய்வில், தங்கத்தாலி, செப்புக் காசுகள், வணிக முத்திரைகள், தந்தத்தாலான பகடைக்காய், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,600க்கு மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.

