தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் குடும்ப வன்முறை அதிகரிப்பு: 4 ஆண்டுகளில் 2,931 வழக்குகள்

1 mins read
224176e5-533f-4e2a-a5fb-e8cc2abfe17d
குடும்ப வன்முறை கவலை தருவதாக காவல்துறை சொல்கிறது. - சித்திரிப்புப் படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வரு வதாகக் காவல்துறை கவலை தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டு களில் மட்டும் குடும்ப வன்முறைகள் தொடர்பாக 2,931 வழக்குகள் பதிவாகி உள்ளதாக காவல்துறையின் பெண்கள், சிறார் களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கணவரும் அவரது குடும்பத்தினரும் தரும் தொல்லைகள் தொடர்பாகவே பெரும்பாலான வழக்குகள் பதிவாகின்றன என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

“பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்களை பாலியல் வன்கொடுமை, மானபங்கம், வரதட்சணைக் கொடுமை, அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளிட்ட பத்துப் பிரிவு களின் கீழ் காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்கிறது.

இந்நிலையில், கடந்த 2020 முதல் 2023 ஏப்ரல் வரை, பெண் களுக்கு எதிராக கணவர், அவரின் உறவினர்கள் தந்த தொல்லைகள் தொடர்பாக, 2,931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் குடும்ப வன்முறை அதிகரித்தது தெரியவந்துள்ளது.

கடந்த, 2022ஆம் ஆண்டு, அதிகபட்சமாக, 1,045 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்