மாடு மேய்க்கும் பிரச்சினை ஐந்து பேர் சுட்டுக் கொலை

1 mins read
ccc8cd43-706c-42e7-8ba4-f5c0d91ffcce
மத்தியப் பிரதேசத்தில் ரெட்டா என்ற கிராமத்தில் இரு தரப்பினரிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். - படம்: இந்திய ஊடகம் 

போபால்: மத்தியப் பிரதேசத்தில் மாடு மேய்க்கும் உரிமை தொடர்பாக இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு கடைசியில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தின் தாதியா என்ற மாவட்டத்தில் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் பலரும் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த மாவட்டத்தில் உள்ள ரெட்டா என்ற கிராமத்தில் வசிக்கும் இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் அது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் கிராமத்திற்கு விரைந்து சென்று கலவரத்தை அடக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்குள்ளாக ஐந்து பேரின் உயிர் போய்விட்டது.

அந்த மோதல் சம்பவம் பற்றி அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

மாடு மேய்ப்பது தொடர்பில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் பிரச்சினை மூண்டதாகவும் அது மோதலில் முடிந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்