வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சுந்தரபுரி என்னும் சிற்றூரில் கல்குவாரி ஒன்று உள்ளது.
அந்தக் கல்குவாரியில் பாறையைப் பிளக்க இயந்திரங்கள் மூலம் துளையிட்டனர். பின்னர் அந்தத் துளையில் வெடிப் பொருள்களை நிரப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத வகையில் பாறையின் மேற்பகுதியில் சரிந்துவிழுந்த கற்கள், வெடிபொருள்கள் மீது விழுந்தது. அதில் ஏற்பட்ட உராய்வால் தீப்பொறி பட்டு அங்கிருந்த வெடிப்பொருள்கள் வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில் கல்குவாரியில் பணிபுரிந்த 60 வயது நாராயணன், 55 வயது மாத்யூ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

