அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

1 mins read
65c0a315-7bef-41ac-adf5-7c1b2269a901
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சனாதனத்திற்கு எதிராகப் பேசியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு வந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்து தள்ளுபடி செய்தது.

உதயநிதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பொதுநல மனு உள்ளிட்ட வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை அவசர வழக்குகளாக உடனடியாக எடுத்து விசாரிக்க கோரி, வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு முன்னிலையான வழக்கறிஞர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர்.

இந்தக் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்த தலைமை நீதிபதி, நீதிமன்ற நடைமுறைகளை வழக்குரைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். அத்துடன், உரிய வழிமுறைப்படி வழக்கு குறித்து திங்கட்கிழமை முறையிடுமாறு மனுதாரருக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.