தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எலும்புகளுடன் முதுமக்கள் தாழி

1 mins read
9d5df684-d8a3-42b6-b199-c3050660e829
திருப்பூரில் சாலை ஓரமாக குழாய் பதிக்க ஊழியர்கள் குழி தோண்டியபோது முதுமக்கள் தாழியைக் கண்டனர். - படம்: இந்திய ஊடகம் 

திருப்பூர்: திருப்பூர் நகரில் சாலையோரத்தில் குழாய் பதிக்க பூமியைத் தோண்டியபோது முதுமக்கள் தாழி ஒன்றை ஊழியர்கள் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் அரசாங்க ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தின் முன்னாள் டாக்டர் கே. கிங் நார்சிஸ்சஸ், தன் வீட்டுக்கு அருகே சிலர் குழி தோண்டிக் கொண்டிருந்தபோது அந்தத் தாழியைக் கண்டதாகக் கூறினார்.

உடனடியாக பணியை நிறுத்திவிடும்படி அந்த ஊழியர்களை அந்த மருத்துவர் கேட்டுக்கொண்டார். அவர் ஊடகத்திற்கும் உயர் அதிகாரிகளுக்கும் அது பற்றி தகவல் தெரிவித்தார்.

முதுமக்கள் தாழியை உறுதிப்படுத்திய தொல்லியல் வரலாற்று ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் எஸ். ரவிகுமார், திருப்பூர் நகரில் குறிப்பிட்ட சில இடங்களில் 2014ல் ஆறு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தால் மேலும் பல தாழிகளைக் காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, கோவையைச் சேர்ந்த தொல்லியல் துறை வல்லுநர்கள் குழு ஒன்று அந்தத் தாழியைப் பரிசோதித்து அதற்குள் கபாலமும் எலும்புகளும் இருந்தன என்றும் அந்தத் தாழி 2,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்