நன்னிலம் அருகே 14 உலோகச் சிலைகள் கண்டெடுப்பு

நன்னிலம் அருகே 14 உலோகச் சிலைகள் கண்டெடுப்பு

1 mins read
4643f342-6b2c-4e5d-832f-662906886794
நெம்மேலி அருகேயுள்ள குச்சிப்பாளையத்தில் குடிநீர் குழாய்ப் பதிக்க குழி தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட உலோக சிலைகள். - படம்: தமிழக ஊடகம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தில், குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிகளுக்காகக் குழி தோண்டியபோது, நான்கு அடி பள்ளத்தில் பல உலோகச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

தகவல் கிடைத்ததும் நன்னிலம் வட்டாட்சியரும் காவல்துறையினரும் சிலைகளைப் பார்வையிட்டனர். இதில், நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர் ஆகிய சுவாமி சிலைகள் உட்பட 14 உலோகச் சிலைகள் இருந்தன. இதையடுத்து, அனைத்துசிலைகளும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

தொல்லியல் துறையினரின் ஆய்வுக்குப் பிறகே இந்த சிலைகளின் உண்மையான மதிப்பு தெரியவரும் என்றும் அதன் பிறகு, அரசு வழிகாட்டுதலின்படி சிலைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்