சீமான் மீதான புகாரை திரும்பப் பெற்ற நடிகை

1 mins read
8fdf6585-466c-4e62-aa0e-09e5e15b1124
சீமான் தன்னைத் திருமணம் செய்து, பின்னர் ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டி புகார் அளித்திருந்தார் விஜயலட்சுமி. - படங்கள்: ஊடகம்

சென்னை: நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் திரும்பப் பெறப்பட்டது.

சீமான் தன்னைத் திருமணம் செய்து, பின்னர் ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டி புகார் அளித்திருந்தார் விஜயலட்சுமி.

இதனையடுத்து, காவல்துறை சீமானுக்கு அழைப்பாணை அனுப்பியது.

இந்நிலையில், விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தனது புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

“இரு வாரங்களாக காவல் துறை பாதுகாப்பில் சென்னையில் இருந்தேன். புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டு பெங்களூரு செல்லத் திட்டமிட்டுள்ளேன்.

“புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல் துறை என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

“சீமானுடன் பேசி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வழக்கில் தொடா்ந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை,” என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்