பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு

பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு

1 mins read
729e1519-b8fd-451e-be03-90989a7612ad
படம்: - தமிழ்முரசு

மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை சந்தைகளில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக, மல்லிகைப் பூவின் விலை ரூ.1,500ஐத் தொட்டது. கடந்த வாரம் அது ரூ.700க்கு விற்கப்பட்டது.

பிச்சிப்பூ, அரளிப்பூ, முல்லைப்பூ ஆகியவற்றின் விலையும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

பூக்களின் வரத்து குறைந்துள்ளதன் காரணமாக விலை அதிகரித்து காணப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்