கோவை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
அதைக் கொண்டாடும் வகையில் கோவை தெற்கு பாஜக சார்பில் ‘தாமரை திருமண விழா’ என்ற ஒரு விழா நடத்தப்பட்டது.
அந்த விழாவில் 73 ஜோடிகளுக்கு இலவசமாகத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 73 ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.
73 திருமண ஜோடிகளுக்கும் 73 விதமான சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
ஒரு நாட்டு மாடு, கிரைண்டர், மிக்சி, பீரோ, கட்டில், மெத்தை, குத்துவிளக்கு, பூ, பழம், காய்கறிகள், பாய், வீட்டு பாத்திரங்கள் உள்ளிட்ட பலவும் சீர்வரிசையாக வழங்கப்பட்டன. அவற்றை புதுமணத் தம்பதிகளுக்கு அண்ணாமலை வழங்கினார்.

