பல்லடம் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது

பல்லடம் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது

1 mins read
30835bd7-04fa-4f07-af3f-8498aa80453c
படுகொலை செய்யப்பட்ட நால்வர். - படம்: ஊடகம்

திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைதானார். இதன் மூலம் கைதானோர் எண்ணிக்கை் 5ஆக உயர்ந்துள்ளது.

பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்டபோது மூண்ட தகராறு காரணமாக நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக ஏற்கெனவே நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவரையும் திருப்பூர் காவல்துறை கைது செய்தது.

விக்னேஷ் என்ற அந்த ஆடவர், பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டார். அப் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடேஷ் சோதனை நடவடிக்கையைக் கண்டு தனது வாகனத்தை திருப்பி தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்