திருச்சி: அமலாக்கத் துறையின் சோதனை நடவடிக்கையை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் முடங்கி உள்ளன.
இதனால் குவாரிகளுக்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
வரி ஏய்ப்பு, பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளுடன் தொடர்புடைய இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இதை யடுத்து கரூர், திருச்சி, வேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் அள்ளும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து நாள்களாக பணம் செலுத்தியவர்களுக்கு மணல் வழங்கப்படவில்லை என்றும் 104 இடங்களில் மணல் குவாரிகள் இருந்தும் 15 இடங்களில்தான் அவை செயல்படுகின்றன என்றும் குவாரி ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.